Header Top Ad
Header Top Ad

Trailer Ready… எதிர்பார்ப்பை கிளப்பும் அந்த 7 நாட்கள்

பாக்யராஜ் நடித்து இயக்கிய படம் “அந்த 7 நாட்கள்”. இப்படம் கடந்த 1981ல் வெளியாகி வெற்றிநடை போட்டது. இதனிடையே, தற்போது “அந்த 7 நாட்கள்” என்ற அதே தலைப்பில் மீண்டும் காதல் சஸ்பென்ஸ் திரைப்படம் வெளியாக உள்ளது.

இப்படத்தை வரும் 12ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். Bestcast Studios முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ள அந்த 7 நாட்கள் படத்தை, எம்.சுந்தர் எழுதி இயக்குகிறார்.

இதில் அஜிதேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே “ரதியே ரதியே” என்ற முதல் பாடல் வெளியாகி யூடியூபில் பல லட்சம் பார்வையாளர்களை பெற்று ஹிட் அடித்துள்ளது.

இப்படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ரொமான்டிக் திரில்லர் கதையம்சத்தில், காதலுடன் சஸ்பென்ஸை கலந்து சொல்லும் படம் என்று அறிமுகப்படுத்தியுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

கோபிநாத் துரை ஒளிப்பதிவில், முத்தமிழன் படத்தொகுப்பில் தயாராகியுள்ள இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் டிரைலர் வெளியானதும் நமது தளத்தில் பதிவிடுகிறோம். இணைந்திருங்கள்.

Recent News