கோவை: நண்பரின் காரை எடுத்து கொண்டு சென்று மரத்தில் மோதி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
கோவை அடுத்த பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் நண்பரின் காரை எடுத்துக்கொண்டு வேகமாக ஓட்டிச் சென்று கட்டுபாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் மோதியதில் இரண்டு நண்பர்கள் உயிரிழந்தனர்.
கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரோஹித்(18) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு B.com படித்து வருகிறார். இவரது நண்பர் பன்னீர்மடையை சேர்ந்த சுதர்சன்(22) பிளக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று இரவு சுதர்சனை பார்ப்பதற்காக ரோகித் அவரது நண்பர்கள் 3 பேருடன் காரில் பன்னீர்மடைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். இடையே சீனிவாசன் என்பவரை பார்த்துவிட்டு இறங்கி பேசி கொண்டிருந்திருந்துள்ளனர். அப்போது ரோஹித் சுதர்சனை மட்டும் அழைத்துக்கொண்டு காரில் ஒரு ரவுண்ட் சென்று வருகிறேன் என கூறி கொண்டு காரில் பன்னீர்மடை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார்.
பிறகு பன்னீர்மடையில் இருந்து திரும்பி வரும் வழியில் பாப்பநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.பி நகர் என்னும் இடத்தில் வேகமாக வந்ததாலும், தூக்க கலக்கத்தில் இருந்ததாலும், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் வலது புறமாக இருந்த புளிய மரத்தில் மோதியுள்ளது.

