கோவை வருகிறார் உதயநிதி!

கோவை: துணை முதலமைச்சர் உதயநிதி கோவை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி மார்ச் 23ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வருகிறார்.

வரும் ஞாயிறன்று கோவை வரும் துணை முதலமைச்சர் ஆர்.எஸ்.புரத்தில் கோவை மாநகராட்சி ஹாக்கி மைதான திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.

பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

மேலும், தி.மு.க. நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Recent News

Video

Join WhatsApp