கோவை: கோவையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (06.08.2025) கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் 97, 100 ஆகிய வார்டுகளுக்கு பொள்ளாச்சி சாலையில் உள்ள ஹெம்அம்பிகா மண்டபத்திலும்,
காரமடை நகராட்சியில் 24,25 வது வார்டுகளுக்கு கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாரி உரியமையாளர் சங்க ஹாலிலும்,
மதுக்கரை நகராட்சியில் 10,11,12 வார்டுகளுக்கு மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள துபாய் மஹாலிலும்,
ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியில் 1,2,3 ஆகிய வார்டுகளுக்கு சின்னப்பம்பாளையத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும்,
கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் சிங்காநல்லூர், வக்கம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு நஞ்சேகவுண்டன்புதூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்யாண மஹாலிலும்,
புறநகர் பகுதியான வெள்ளானைப்பட்டிக்கு பெரியநாயகி அம்மன் மஹாலிலும் என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.