கோவை அரசு மருத்துவமனையில் காரில் உடலை எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கோவை: கோவையில் அமரர் ஊர்தி வருவதற்கு தாமதமானதால், காரில் உடலை எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் அமரர் ஊர்தி வராததால் அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்து கார் மூலம் உடலை எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

ஊட்டியை சேர்ந்த 67வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். பின்னர் மூதாட்டியின் உடலை பிணவறையில் வைத்திருந்த போது அமரர் ஊர்தி வரவேண்டும் என்பதால் உடலை ஒப்படைக்காமல் இருந்துள்ளனர்.

அப்போது மூதாட்டியின் மகன் உடனடியாக அமரர் ஊர்தி வரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் அமரர் ஊர்தி வருவதற்கு தாமதமானதால் மூதாட்டியின் மகன் அவரது காரை பிணவறை அருகே எடுத்து வந்து மூதாட்டி உடலை கார் மூலம் எடுத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்த காவலர்கள் காரை துரத்தி பிடித்து அறிவுரை கூறி உடலை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மனைவியை கொலை செய்த கணவன்- மாமனார், சின்ன மாமனார் உதவி- கோவையில் அரங்கேறிய சம்பவம்…

கோவை: மனைவியை மதுவில் விஷம் வைத்துக் கொன்று சடலத்தை மறைத்த கணவன் உள்பட 3 பேர் கைது கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை விஷம் வைத்துக் கொன்ற கணவர்...

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...