கோவை: கோவையில் ஆகஸ்ட் 12ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 12ம் தேதி, கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பகுதியில் உள்ள 85 மற்றும் 95 ஆகிய வார்டுகளுக்கு போத்தனூர் சங்கமம் கல்யாண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது.
காரமடை நகராட்சி 18,19,20 ஆகிய வார்டுகளுக்கு தாசபளஞ்சிகா மண்டபத்திலும், மேட்டுப்பாளையம் நகராட்சி 1,4,5 ஆகிய வார்டுகளுக்கு ஓடந்துறை மதினா நகர் பகுதியில் உள்ள டிவி.எஸ். மஹாலிம் முகாம் நடைபெறுகிறது.
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி 1 முதல் 9 ஆகிய வார்டுகளுக்கு பாலகிருஷ்ணா கல்யாண மண்டபத்திலும், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் தேவனாம்பாளையம், கக்கடவு, காணியாம்பாளையம், சோலனூர், வரதனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு கோவில்பாளையம் எஸ்.எம்.எம்.ஆர் மண்டபத்திலும்,
பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம், சின்ன நெகமம், மூலனூர், என்.சந்திராபுரம், ஆவலாபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு நெகமம் தங்கவேல் அய்யன் மண்டபத்திலும் என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.
எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.