கோவை: கோவையில் செப்டம்பர் 9ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மக்களின் கோரிக்கைகள், குறைகள், மற்றும் அரசு திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த மனுக்களை அதிகாரிகள் நேரடியாக மக்களிடம் பெறும் நோக்கில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே வரும் செவ்வாய்க்கிழமை கோவையி ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை முதலமைச்சரின் தனிப்பிரிவு அறிவித்துள்ளது.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு– சரவணம்பட்டி SRP மில்ஸ் பகுதியில் உள்ள குளோபஸ் சென்டரில் நடைபெறுகிறது
மதுக்கரை நகராட்சிக்கு – செட்டிபாளையம் சாலையிலுள்ள லட்சுமி பாலாஜி திருமணமண்டபத்தில் நடைபெறுகிறது
வெட்டைக்காரன்புதூர் டவுன் பஞ்சாயத்துக்கு – வார்டு எண் 3ல், கிருஷ்ணசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது.
கிணத்துக்கடவு பிளாக்– வடசித்தூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
பொள்ளாச்சி தெற்கு பிளாக்– சின்னம்பாளையம் தங்கசரரு மஹாலில் நடைபெறுகிறது.
மதுக்கரை பிளாக் – நாச்சிப்பாளையம் ஆதித்யா மஹாலில் முகாம் நடைபெறுகிறது.
முகாம் நேரம்:
செப்டம்பர் 9, காலை 10 மணி முதல் மாலை வரை
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈