Ungaludan Stalin Camp: கோவையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 44, 45வது வார்டுகளுக்கு சாய்பாபா கோவில் சாய்தீப் திருமண மண்டபத்திலும், மத்திய மண்டலத்தில் உள்ள 80வது வார்டுக்கு கெம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி மண்டபத்திலும் முகாம் நடைபெறுகிறது.
மதுக்கரை நகராட்சியில் 15,16 ஆகிய வார்டுகளுக்கு மதுக்கரை நகராட்சி அலுவலக வளாகத்திலும், நம்பர்.4 வீரபாண்டி பேரூராட்சியில் 3, 4, 5, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய வார்டுகளுக்கு பொன் ராமசாமி கல்யாணமண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.
ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமந்துறை, தென்சித்தூர், பெத்தநாயக்கனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு காமாட்சி திருமண மண்டபத்திலும், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு கிராம ஊராட்சி அலுவலகத்திலும் என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.