கோவை: கோவையில் செப்டம்பர் 23ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், 18,19,30 வது வார்டுகளுக்கு மணியகாரம்பாளையத்திலுள்ள ஸ்ரீகிருஷ்ணா கவுண்டர் கல்யாண மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் 32 வது வார்டுக்கு மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்திலும், காரமடை நகராட்சியில் 21, 22 ஆகிய வார்டுகளுக்கு நகராட்சி அலுவலகம் அருகிலும்,
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 10 முதல் 18 வரையிலான வார்டுகளுக்கு பாலகிருஷ்ண கல்யாண மண்டபத்திலும், சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கனியூர் ஊராட்சிக்கு ஊஞ்சம்பாளையத்திலுள்ள எஸ்கேஎன் மஹாலிலும்,
பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குரும்பபாளையம், கிட்டசூரம்பாளையம் ஊராட்சிகளுக்கு பனிக்கம்பட்டியில் உள்ள ஐஎம்ஏ மஹாலிலும் என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.