Header Top Ad
Header Top Ad

விடியலை நோக்கி வெள்ளலூர் குப்பைக் கிடங்கு ; மாநகராட்சி கொடுத்த அறிக்கை

கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கு செயல்பாடுகள் குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் கூறியிருப்பதாவது:-

Advertisement
Lazy Placeholder

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளலூர் உரக் கிடங்கு 654 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். வெள்ளலுர் உரக் கிடங்கிற்கு கொண்டு வரப்படும் குப்பைகளை விண்ட்ரோ முறையில் தரம் பிரித்து உரமாக்க தினசரி 700 மெட்ரிக் டன் குப்பை மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மக்கும் குப்பை தினசரி 100 மெட்ரிக் டன் மண்புழு உரம் (Vermi Compost) தயாரிக்கப்படுகிறது.

உலர் கழிவுகளை வள மீட்பு மையம் (MCC) இயற்கை எரிவாயு கலன் (Bio Methanation Plant) ஆகியவற்றின் மூலம் தினசரி 100 டன் குப்பைகள் மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement
Lazy Placeholder
Lazy Placeholder

மேலும், வெள்ளலூர் உரக்கிடங்கு மேம்பாட்டு பணிக்காக ஏற்கெனவே உள்ள பழைய குப்பை கழிவுகளை அறிவியல் ரீதியாக அகற்றுவதற்கு ரூ.60.00 கோடி மதிப்பீட்டில் Bio Mining திட்டம் (Phase-1) செயல்படுத்தி குப்பைகள் அழிக்கப்பட்டு 54 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மீதமுள்ள அனைத்து பழைய குப்பைகளை அகற்றுவதற்கு, SBM 2.0 திட்டத்தில் செயல்படுத்த ரூ.58.54 கோடி (Phase-2) திட்டம் தயாரிக்கப்பட்டு 7,94,139 மெட்ரிக் டன் கொண்ட குப்பைகளை Bio-Mining முறையில் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கூடுதலாக 84.62 ஏக்கர் நிலம் மீட்கப்பட உள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தினந்தோறும் சேகரமாகும் மக்கும் கழிவுகளை அகற்றுவதற்கு SBM 2.0 திட்டத்தில் (DBFOT under PPP mode) செயல்படுத்த ரூ.69.20 கோடி மதிப்பீட்டில் 250 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள இயற்கை எரிவாயு மையம் (Bio CNG Plant) அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.

Lazy Placeholder

கோயம்புத்தூர் மாநகராட்சியில் சேகரமாகும் மக்கும் குப்பைகளை தனியாக சேகரித்து எரிசக்தி உருவாக்கும் திட்டம் (Waste to Energy Plant) மூலம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வெள்ளலூர் வளாகத்தை சுற்றிலும் 4,200 மரக்கன்றுகள் மற்றும் சாலையின் இருபுறமும் 800 மரக்கன்றுகள் நடப்பட்டு, முறையாக பராமரிக்கப்பட்டு பசுமை பகுதியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்கனவே ஒரு நீர்த்தேக்கக்குளம் (Lagoon) செயல்பட்டு வருகிறது. மேலும், இரு நீர்த்தேக்கக்குளங்கள் மேம்படுத்தப்பட்டு நீர் சேகரிக்கவும், அவற்றை குப்பைக் கிடங்கு உபயோகம், தீத்தடுப்பு போன்ற அவசர கால தேவை மற்றும் நடப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள பழைய குப்பைகள். தீப்பிடிக்காவண்ணம் தீயணைப்பு வாகனங்கள் சென்று வரும் வகையில் சாலை அமைத்து பிரிக்கப்பட்டுள்ளன. மேலும், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை மட்டத் தொட்டி மற்றும் 200 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு உரக்கிடங்கில் 1000 மீட்டர் நீளத்திற்கு தண்ணீர் குழாய்கள் மற்றும் தீ அணைப்பு முனையங்கள் (Fire Hydrants) நிறுவப்பட்டுள்ளன.

Lazy Placeholder

உரக் கிடங்கினுள் வெளியாட்கள் / சமூக விரோதிகள் நுழைவதை தடுக்கும் விதமாக உயர் மட்ட கண்காணிப்பு கோபுரம் (Watch Tower) CCTV கேமராக்கள், புதிய அணுகு சாலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

குப்பைக் கிடங்கினை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கொண்ட குழு மற்றும் 12 எண்ணிக்கையிலான முழு நேர காவலர்கள் 4 குடிநீர் டேங்கர் லாரி மற்றும் 12 தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்ட டீசல் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது.

தீயணைப்பு அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்புத்துறை வாகனம் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் நடைபெற்று வரும் Windrow உரக்கிடங்கு, மண்புழு உர மையம், பையோ மைனிங் மற்றும் குப்பை கிடங்கின் செயல்பாடுகளை தொடர்ந்து ஆய்வு செய்திட மாநகராட்சியின் சார்பில் துணை ஆணையாளர் தலைமையில் 15 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

Lazy Placeholder

மேலும், வெள்ளலூர் உரக்கிடங்கு பகுதியினை சுற்றியுள்ள பொதுமக்களின் நலனை காக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்துக் மேற்கொள்ளப்பட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டி பல ஆண்டுகளாக மக்கள் தவித்து வரும் நிலையில், குப்பைக்கிடங்கு பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையிலான, மாநகராட்சியின் செயல்பாடுகளை விளக்கும் அறிக்கை மக்கள் மத்தியில் சற்றே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை முழு வீச்சில் செயல்படுத்திட மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Recent News

Latest Articles