Header Top Ad
Header Top Ad

ஈஷா லிங்கபைரவி வளாகத்தில் விமர்சையாக நடைபெற்ற வித்யாரம்பம்

கோவை: விஜயதசமியை முன்னிட்டு ஈஷா லிங்கபைரவி வளாகத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

விஜயதசமியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்கபைரவி வளாகத்தில் பழங்குடியின குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய மக்கள் பலர் விஜயதசமி நாளில் கல்வியை தொடங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நாளில் குழந்தைகள் கல்வியை துவங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது எனவே பொதுமக்கள் பலரும் அவர்களது குழந்தைகளை விஜயதசமி நாளில் பள்ளிக்கூடங்களில் சேர்ப்பர்.

அந்த வகையில் லிங்க பைரவி வளாகத்தில் ஈஷாவை சுற்றியுள்ள முள்ளங்காடு, தானிக்கண்டி, பட்டியார்கோவில்பதி, மடக்காடு உள்ளிட்ட பழங்குடியின கிராமத்து குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

மேலும் ஈஷா வித்யா பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் அவர்கள் உயர்கல்வி மேற்கொள்வதற்கான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News