கோவையில் வித்யாரம்பம்- குழந்தைகளின் கல்வியை துவக்கி வைத்த பெற்றோர்…

கோவை: கோவையில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சியில் நெல்லில் எழுத்துக்களை எழுத வைத்து குழந்தைகளுக்கான கல்வி தொடங்கப்பட்டது.

கோவை தடாகம் சாலை, இடையர்பாளையம் காந்திநகர் பகுதியில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

Advertisement

விஜயதசமி நாளில் குழந்தைகளின் கல்வியைத் தொடங்கினால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறந்த கல்வி அறிவைப் பெற்று விளங்குவார்கள் என்பது மலையாள மக்களின் பாரம்பரிய நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அதன்படி, விஜயதசமி நாளில் கோவில்களில் நடைபெறும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகளை அழைத்து வந்து கல்வியைத் தொடங்கி வைப்பது வழக்கமாக உள்ளது.

Advertisement

அதன்படி, கோவை இடையர்பாளையம் காந்திநகர் பகுதியில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலில் இன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து, நம்பூதிரிகள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி எழுத்தறிவித்தனர்.

நிகழ்ச்சியின்போது, குழந்தைகளின் விரல்களைப் பிடித்து நெல்லில் கடவுளின் பெயர் அல்லது முதல் எழுத்துகளை எழுத வைத்து கல்வியைத் தொடங்கி வைத்தனர். முன்னதாக, ஐயப்ப சுவாமியைத் தரிசனம் செய்த பெற்றோர், குழந்தைகளின் கல்வி சிறக்கவும், எதிர்காலம் வளமாக அமையவும் வேண்டிக்கொண்டனர்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து பங்கேற்றனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...