உடனே சூட்டிங் தொடங்க சொன்ன விஜய்… கடைசியில் சூர்யாவுக்கு கைமாறிய படம்!

கதையை கேட்டு சூட்டிங்கை தொடங்க சொன்ன விஜய், ஆனால் கடைசியில் அந்த கதை சூர்யாவுக்கு கைமாறியுள்ளது.

நடிகர் விஜய், தற்போது சினிமாவில் இருந்து அரசியலில் குதித்துள்ளார். இனி அவரை திரையில் காண முடியாது என ரசிகர்கள் சோகத்தில் இருந்து வரும் நிலையில், அவர் நடித்த ஜனநாயகன் படமும் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கவுந்து போன கப்பல் போல கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Click here to read news சூர்யாவிடம் வம்பிழுத்த விஜய் ரசிகர்கள்… ஜோதிகா கொடுத்த பதிலடி!

இந்த நிலையில்தான், விஜய்க்கு போன படம் கடைசியில் கைமாறி நடிகர் சூர்யாவுக்கு போயுள்ளது. அது எந்த படம் தெரியுமா?

Vijay Surya Rj Balaji

நடிகர் சூர்யா முன்னணி நடிகராக உள்ள நிலையில், கடைசியில் அவருக்கு ஹிட் கொடுத்த படம் என்றால் ஜெய் பீம் மட்டும்தான்,. ஆனால் அந்த படத்தை அவருடைய வெற்றி என முழுமையாக கொண்டாட முடியாது.

இதனால் சமீப காலமாக வெற்றி கனியை எட்ட முடியாமல் சிக்கி தவித்து வருகிறார் சூர்யா. தற்போது அவருக்கு ஏராளமான படங்கள் கைவசம் இருந்தாலும், கருப்பு படம் திருப்புமுனையை ஏற்படுத்துமா என ரசிகர்கள் காத்துள்ளனர்.

ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்த படம் அறிவித்து பல மாதங்கள் ஆகியும் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே உள்ளது. சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார்.

Click here to read news 44 வயதில் அனுஷ்காவுக்கு திருமணம்..? Age Shaming செய்வது நியாயமா!

சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. குறிப்பாக பின்னணி இசையில் சாய் மிரட்டியுள்ளார். இதனால் கண்டிப்பாக இந்த படம் ஹிட் என ரசிகர்கள் மார்த்தட்டி வருகின்றனர்.

RJ Balaji Surya

இதனிடையே இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி சமீபத்திய பேட்டியில் கூறும்போது,கருப்பு படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் தான் கூறினேன்.

அவரும் கதையை கேட்டு இம்ப்ரஸ் ஆகி விட்டார். 2023ல் இந்த படத்துக்கான கதையை எழுதினேன், கதையில் மிகப்பெரிய ஐடியா உள்ளதால் நிச்சயம் பெரிய ஹீரோ நடித்தால் தான் நன்றாக இருக்கும் என விஜய்யிடம் கூறினேன்.

கதையை கேட்ட உடனே, அவர் சூட்டிங் எப்போது ஆரம்பிக்கலாம் என கேட்டார். என்னுடைய ஸ்டைலில் ஒரு படம் பண்ண வேண்டும் என அவர் சொல்ல, நான் இன்னும் நேரம் வேண்டும் என கேட்டேன்.

Vijay Surya Rj Balaji

ஆனால் காலம் அதற்குள் மாறிவிட்டது. சினிமாவை விட்டு அரசியலுக்கு போகிறேன் என விஜய் அறிவித்துவிட்டதால் அது நடக்காமல் போய்விட்டது.

பின்னர் தான் இந்த கதையில் சில மாற்றம் செய்து, சூர்யாவுக்கு சொல்லி ஓகே வாங்கினேன் என அவர் ஓபனாக கூறியுள்ளார். இதைக் கேட்ட சினிமா விமர்சகர்கள், கடைசி படமாக விஜய் இந்த படத்தை தேர்வு செய்திருக்கலாம் என விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஒரே மாதிரி உடை… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் – திரிஷா..!

அட்லீ குடும்ப நிகழ்ச்சியில் விஜய் மற்றும் திரிஷா ஒரே மாதிரியான நீல நிற outfit-இல் இருந்ததாக கூறப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

Video

கோவையில் கார் தீ பிடிப்பு- சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்…

கோவை சின்னியம்பாளையம் அருகே அவினாசி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.