கட்டிப்பிடித்து போட்ட போட்டோ.. தலைப்பு செய்தியாக மாறிய திரிஷா!

சோஷியல் மீடியாவில் கட்டிப்பிடித்து எடுத்த போட்டோவை திரிஷா ஷேர் செய்தது டிரெண்டாகி வருகிறது.

தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் கொடிகட்டி பறந்த நடிகை திரிஷா. லேசா லேசா படம் மூலம் அறிமுகமானாலும், மௌனம் பேசியதே படம் தான் முதலில் ரிலீஸ். இதனால் அறிமுக படத்திலேயே அசத்தலான நடிப்பை பாராட்டினர் ரசிகர்கள்.

Lesa

தொடர்ந்து பட வாய்ப்பு கொட்ட, குறுகிய காலத்தில் உச்ச நடிகையாக மாறினார் திரிஷா. சாமி, கில்லி, திருப்பாச்சி, உனக்கு எனக்கும் என வரிசை கட்டி படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனது.

Advertisement

Click here to read news உடனே சூட்டிங் தொடங்க சொன்ன விஜய்… கடைசியில் சூர்யாவுக்கு கைமாறிய படம்!

தெலுங்கிலும் இவர் நடித்த வர்ஷம் படம் ஹிட் ஆக, தொடாந்து பட வாய்ப்பு குவிந்தது. அங்கு வளர்ந்து வந்த ராணாவுடன் காதல் என செய்தி வெளியானது. இவர்கள் காதலித்து வந்த நிலையில், ராணா குடும்பம் எதிர்க்க, காதலும் கைகூடவில்லை.

Advertisement

மேலும் தெலுங்கில் திரிஷாவுக்கு கிடைத்த வாய்ப்புகளும் குறையத் தொடங்கியது. இதற்கு பின்னணியில் ராணாவின் குடும்பத்தினர் தான் காரணம் என அக்கட தேசத்து ஊடங்களும் செய்திகளை வெளியிட்டன.

ஆனால் திரிஷா இதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை, தொடர்ந்து தமிழ், இந்தியில் நடித்தார். கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்தார். 20 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் அவருக்கு மீண்டும் பொன்னியின் செல்வன் பெரிய ஹிட் கொடுத்தது. தொடர்ந்து லியோ, விடா முயற்சி, குட்பேட் அக்லி, தக் ஃலைப் என குவிந்தன.

Trisha Raana

தற்போது சூர்யாவிடன் கருப்பு படத்தில் நடித்து வரும் அவர், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். இதனிடையே விஜய் மனைவி சங்கீதா கொடுத்த விவாரகத்து மனுவில் நடிகையின் பெயரும், உடனே விஜய்யுடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் திரிஷா பங்கேற்றது என பெரும் சர்ச்சையானது.

Click here to Read news விஜய் அவசரமாக மும்பைக்கு போனது இதுக்குதானா? அட்லீ விட்டு விசேஷத்திலும் சர்ச்சை!

அதையெல்லாம் கண்டுகொள்ளாத திரிஷா, தொடர்ந்து சோஷியல் மீடியாவில் போட்டோக்களை பதிவேற்ற அது தலைப்பு செய்தியாகவே மாறிவிடுகிறது. அவரும் எந்த விமர்சனங்களுக்கும் பதில் சொல்லாமல், ஜாலியாக உள்ளார்.

Vijay Trisha

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் போட்ட போஸ்ட் வைரலாகி வருகிறது. ஒருவரை கட்டிப்பிடித்து போஸ் கொடுத்து பர்த்டே வாழ்த்து சொல்லியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், திரிஷா சுற்றி இத்தனை சர்ச்சைகள் ஓடிக்கிட்டிருக்கு.. ஆனால் மேடம் கூலாகே இருக்காங்களே என கூறி வருகின்றனர்.

Flipkart Link 1
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

ஓடிடியில் சுதந்திர தின வருகையாக வரும் ‘பாரத் பாக்ய விதாத்தா’! வரிசை கட்டி நிற்கும் 9 படங்கள்…!

கடந்த இரு தினங்களில் வெளியான மற்றும் அடுத்த வாரம் வெளியாக உள்ள OTT படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்த முக்கிய தகவல்கள் ரசிகர்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளன.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.