கோவையில் மனைவியுடன் செல்போன் உரையாடல் விபரீதம்.. இளைஞர் பரிதாப பலி!

கோவை: கோவையில் செல்போன் பேசியபோது மாடியில் இருந்து விழுந்து ஜேசிபி ஆபரேட்டர் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசலை சேர்ந்தவர் விவேக்(33). இவர் கோவை வடவள்ளி பகுதியில் தங்கி ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று விவேக் தனது மனைவி சிவரஞ்சனியிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் பேசியவாறே மாடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் எதிர்பாராத விதமாக 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனைப்பார்த்து ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Read Also: உக்கடம் சோலார் திட்டம் பலன்.. கோவையில் மின் உற்பத்தி அதிகரிப்பு!

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் சமூக நீதி சாசனம் வெளியிடப்பட்டது…

கோவை: கோவையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சமூகநீதி சாசனம் வெளியிடப்பட்டது கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சமூகநீதி சாசனம் என்ற...

Video

கோவை அருகே விபத்து- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை அருகே ஏற்பட்ட விபத்தில் தந்தை - மகன் படுகாயமடைந்தனர். அந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள தட்டாம் புதூர் பகுதியில், அதிவேகமாக வந்த கார்...