ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு செல்வது?- கோவையில் கருத்து தெரிவித்த பள்ளிகல்வி துறை அமைச்சர்…

கோவை: ருத்ராட்சம் அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்வதை கட்டாயப்படுத்தக்கூடாது அதைத்தான் பிற்போக்குத்தனம் என்று கருதுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்…

கோவை மாவட்ட கல்வித் துறை சார்பில் “கற்றல் அடைவு” குறித்த ஆய்வு கூட்டம் புரூக்பீல்ட்ஸ் சாலையில் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் கோவை மாவட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார்.

கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் அனைத்து தேர்வுகளிலும் சிறப்பாக தேர்வு பெறுவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கோவை மாவட்டத்தில் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகளில் நல்ல தேர்ச்சியை பள்ளிகள் பெற்றுள்ளன. ஆனால் 11 ம் வகுப்பில், குறைந்துள்ளது என்றார். 3, 5, 8 வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு நடந்த தேர்தலில் 3 ம் வகுப்பில் தேர்ச்சி குறைந்து உள்ளது என்றும் 5 ஆம் வகுப்பு சிறிது மேம்பட்டு உள்ள நிலையில் 8 வகுப்பு மாணவர்கள் தேர்வு சிறிது மேம்பட்டு உள்ளது என்றார்.பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதை சரி செய்து மேம்படுத்துவது குறித்து உடனே நடவடிக்கை எடுத்து இருப்பீர்கள் என்றார்.

மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளரை காட்டிலும் ஆசிரியர்கள் நீங்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் அப்படி இருக்கும் போது இவர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். நம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிகரான ஆசிரியர்கள் உலகில் வேறு யாரும் கிடையாது என்றார்.

பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு Review மீட்டிங்கை முடித்துள்ளோம் என்றும்
தேர்வில் ஒரு கேள்வியை பல விதங்களில் கேட்கலாம். எனவே ஆசிரியர்கள் உங்கள் மாணவர்களை தயார் படுத்துங்கள் என கூறினார்

மட்கம் செய்து யார் வேண்டுமானாலும் படித்து விடலாம். ஆனால் மாணவர்கள் படிப்பை புரிந்து படிக்க வேண்டும் என்றார். ஆய்வு Report யை ஆசிரியர்கள் உங்கள் கையில் கொடுத்துள்ளோம் இனி நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

என்னால் மறக்க முடியாத ஒன்று என்றால் கிணத்துக்கடவு தொகுதியில் உள்ள கண்பார்வையற்ற ஆசிரியர் எளிமையான முறையில் பாடம் நடத்துகிறார். அது போன்று ஒரு சிறப்பான ஆசிரியை நாம் பெற்றுள்ளோம் என்றார்.
பாடம் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை பார்க்க வேண்டியது தலைமை ஆசிரியர் கடமை என்றார்.

All Pass செய்வதில் புரியோஜனம் இல்லை. அப்படி இருந்தால் மேல் படிப்பில் குழந்தைகளுக்கு சிரமம் ஏற்படும் என தெரிவித்தார். Smart Class மூலமாக எவ்வாறு படிப்பை எடுத்து செல்லலாம் என்றும் ஆசிரியர்கள் நீங்கள் பார்க்க வேண்டும் என்றார்.

160 கோடி ரூபாயில் High Tech Lab கொண்டு வரப்பட உள்ளது, நம் பிள்ளைகளுக்கு அறிவை கொடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்றார்.

மேலும் கொரோனா விற்கு பிறகு மீண்டும் கல்வியை நாம் இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளோம், எந்த தொழில்நுட்பம் வந்தாலும் நாம் தயாராக இருக்க வேண்டும் எந்த தொழில்நுட்பம் வந்தாலும் தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள் தயாராக இருப்பார்கள் என கூற வேண்டும் என்றார்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
பள்ளியில் என்னென்ன செய்யப் போகின்றோம் என்னென்ன பாடப்பிரிவுகளில் பின் தங்கியுள்ளோம் அதனை எவ்வாறு சரி செய்யப்போகிறோம் என்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது என்றார்.
அடுத்த ஆண்டு ஸ்லாஸ் ரிப்போர்ட் வரும் பொழுது முன்னேறி இருக்கிறோம் என்று ஆசிரியர்களை தெரிவித்துள்ளார்கள் என்றார்.

ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தனியாக ரிப்போர்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது என்றார். கோவையில் சூலூர் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதி பள்ளிகள் சற்று பின்தங்கி உள்ளது என்றார். ஹைடெக் லேப் டெண்டர் பணிகளை பைனான்ஸ் பிரிவு பார்த்துக் கொள்கிறது என்றும் எஸ் எஸ் ஏ யை பொறுத்தவரை பணம் வரவில்லை , தமிழக அரசு முதல் தவணை ஆகிய 700 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது என்றார்.
ஆர் டி ஆக்ட் தனியார் பள்ளிகளில் நம் பிள்ளைகளை சேர்க்கின்ற ஒரு ஆக்ட் அது, மத்திய அரசு அதற்கான 600கோடி ரூபாய் பணத்தை தரவில்லை நாம் தந்திருக்க கூடிய பணத்தையும் அவர்கள் தரவில்லை என கூறிய அவர், நாம் நம்பி அவர்களுக்கு( மத்திய அரசு) அட்வான்ஸ் அளித்த பணத்தை கூட அவர்கள் தரவில்லை என்றார்.

ருத்ராட்சம் அணிவது குறித்து அண்ணாமலை தெரிவித்திருந்த கருத்துக்கு பதில் அளித்த அவர் ஒவ்வொருவருக்கும் மதம் சார்ந்த நம்பிக்கை உள்ளது அதில் யாருடைய தலையிடும் இருக்க கூடாது, பள்ளிக்கூடம் என்பது பொதுவான ஒரு இடம் அங்கு அறிவு சார்ந்த விஷயங்களை சொல்லித் தாருங்கள் என்று அறிவுரை கூற வேண்டும் என்றார்.

அதை விட்டு இதுபோன்று கூறுவதை தான் பிற்போக்குத்தனம் என்று நான் குறிப்பிடுகிறேன் என்றார்.

நம்பிக்கைகள் யாரும் தலையிடக்கூடாது ஆனால் அதனை கட்டாயப்படுத்தும் பொழுது பள்ளிகளில் அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும், மதம் சார்ந்து அவ்வாறு செய்கிறோம் என்று அவர்கள் கூறினால் நீட் தேர்வு எழுதும் பொழுது தாலியை கூட கழட்டி வைத்துவிட்டு எழுதுங்கள் என்று கூறுகிறார்களே
அங்கொன்றும் இங்கொன்றும் பேசக்கூடாது என்றார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

மேட்டுப்பாளையம் அருகே 4 லட்சம் பறிமுதல்…

கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய...

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

தடாகம் அருகே வரப்பாளையத்தில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் வாழைமரங்கள், விவசாய நிலங்களை சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகின.