கோவை: கோவையில் இந்த வார வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் கோவையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு ஆலெர்ட் விடுக்கப்பட்ட நிலையிலும், எதிர்பார்த்த அளவு கோவையில் மழைப்பொழிவு காணப்படவில்லை.
இதனிடையே இன்று (ஜூலை 29ம் தேதி) முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரையிலான வானிலை நிலவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
கோவை செய்திகளை மொபைலில் பெற எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
வானிலை மையத்தின் இந்த கணிப்புகள் மாறுபடலாம். அப்போது வெளியிடப்படும் புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறோம். News Clouds Coimbatore தளத்துடன் இணைந்திருங்கள்.