இதைக்கூடவா தூக்கிட்டு போவிங்க…? கோவை மக்களே இந்த வீடியோவ பாருங்க!

கோவை: டெலிவரிக்கு வைத்திருந்த கேஸ் சிலிண்டரை இளைஞர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாநகர் உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியில் நாள்தோறும் சிலிண்டர் டெலிவரி செய்வதற்கு சாலையோரம் சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்படும். பின்னர் அதனை எடுத்துச் சென்று டெலிவரி செய்வார்கள்.

Advertisement

அதேபோன்று இன்று காலையும் அந்த பகுதியில் சாலையோரம் சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டு டெலிவரி செய்பவர்கள் அருகில் உள்ள இல்லங்களுக்கு கேஸ் சிலிண்டரை டெலிவரி செய்வதற்கு சிறிது எடுத்துச் சென்ற நிலையில் இரண்டு மூன்று சிலிண்டர்களை சாலையோரம் வைத்துள்ளனர்.

திரும்பி வந்து பார்க்கும் பொழுது அதில் ஒரு சிலிண்டர் குறைவாக இருந்ததை கவனித்துள்ளனர் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் அந்த பகுதியில் யாராவது வருகிறார்களா என்று சிறிது நேரம் நோட்டமிட்டு சாலையோரம் இருந்த கேஸ் சிலிண்டர்களில் ஒன்றை எடுத்து கொண்டு பைக்கில் தப்பி சென்றுள்ளனர்.

இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் அந்த இளைஞர்களை தேடி வருகின்றனர். தற்பொழுது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Recent News