கோவை: கோவை விளாங்குறிச்சியில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென அவ்வழியாக வந்த லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வால்பாறையைச் சேர்ந்தவர் தனலட்சுமி (40). இவர் கோவை விளாங்குறிச்சி பகுதியில் தனது ஆண் நண்பருடன் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவர் திடீரென அந்த வழியாக வந்த லாரி முன் பாந்தார். அதில் லாரி அவர் மீது ஏறி இறங்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வந்து தனலட்சுமியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தனலட்சுமி எதற்காக கோவை வந்தார்? எதற்காக லாரி முன் பாயந்து தற்கொலை செய்து கொண்டார்? ஆண் நண்பருடன் தகராறில் ஈடுபட்டு லாரி முன் பாய்ந்தாரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


