கோவை: வாலாங்குளம் பூங்கா கழிப்பறைக்குள் இளம் காதல் ஜோடி சில்மிஷத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள குளக்கரைகள் சீர் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து குளக்கரைகளிலும் குழந்தைகள் பூங்காக்கள், நடைபயிற்சி செல்ல தளம் அமைக்கப்பட்டுள்ளது. சில குளங்களில் படகு சாவரி, சாகச விளையாட்டுகள் என பல்வேறு அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
அந்த குளக்கரைகளில் தினமும் காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள் விளையாடுவதும், நடைப்பயிற்சி செல்வதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இங்கு காதல் ஜோடிகளும் வந்து அமர்ந்து தங்களது நேரத்தை போக்கி வருகின்றனர். சில காதல் ஜோடிகள் பொதுமக்கள், குழந்தைகள் இருப்பதை கூட கண்டு கொள்ளாமல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை அவ்வபோது ரோந்து போலீசார் கண்டித்து அனுப்பி விடுகின்றனர். ஆனாலும் காதல் ஜோடிகள் தங்களது லீலைகளை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வாலாங்குளத்தில் உள்ள கழிப்பறைக்குள் சென்று அத்துமீறிய காதல் ஜோடியால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கழிவறைக்குள் நுழைந்த ஜோடி
வாலாங்குளத்தின் ஒரு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. அந்த கழிப்பறைக்குள் நேற்று இரவு ஒரு காதல் ஜோடி சென்றுள்ளனர்.
20 வயது கல்லூரி மாணவரும், 18 வயது கல்லூரி மாணவியுமான அந்த காதல் ஜோடி பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் அந்த கல்லூரி காதல் ஜோடி ஆண்கள் கழிப்பறைக்குள் சென்றனர். கதவை பூட்டி கொண்ட அந்த காதல் ஜோடி வெகு நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளி கழிப்பறையின் ஆண்கள் பகுதிக்கு சென்றார்.
அப்போது கழிப்பறைக்குள் உள்ளே இருவரும் பேசும் சத்தம் கேட்டுள்ளது. உடனே காவலாளி கழிப்பறையின் கதவை தட்டினார். அப்போது கல்லூரி மாணவர் மட்டும் வெளியில் தலையை விட்டு எட்டி பார்த்தார்.
உடனே காவலாளி அவரிடம் உள்ளே என்ன பெண் சத்தம் கேட்கிறது என்றார். அதற்கு அந்த கல்லூரி மாணவர் ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் காவலாளி கதவை தள்ளிக் கொண்டு திறந்து பார்த்தபோது ஓரமாக கல்லூரி மாணவி பதட்டத்துடன் நின்று கொண்டிருந்ததை பார்த்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி அவர்கள் இருவரையும் வெளியே அழைத்து வந்தார். அவர்களிடம் எதற்காக ஆண்கள் கழிப்பறைக்குள் இருவரும் சென்றீர்கள் என கேட்டு கண்டித்தார். இதனால் அங்கு நடைபெச்சி செய்து கொண்டு இருந்த பொதுமக்கள் கழிப்பறை முன்பு திரண்டனர்.
அவர்கள் காதல் ஜோடியிடம் பொது இடத்தில் இவ்வாறு நடந்து கொள்ளலாமா? என கேட்டு இருவரையும் கடுமையாக எச்சரித்தனர். தொடர்ந்து அந்த காதல் ஜோடி மன்னிப்பு கேட்டு பைக்கில் வேகமாக பறந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

