கோவையில் புரோட்டா மாஸ்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்…
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் சந்துரு(35). இவர் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக உள்ளார். நேற்று முன்தினம் சந்துரு கோவை அரசு மருத்துவமனை அருகே நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சந்துருவிடம் பணம் கேட்டு மிரட்டினார். அதற்கு சந்துரு பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி சந்துருவை தாக்கினார். இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இது குறித்து சந்துரு ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், சந்துருவை தாக்கியது சேலம் மாவட்டம் எடப்பாடி போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த கஜேந்திரன்(38) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.