கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே சீர்கேடு! – VIDEO

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக News Clouds Coimbatore வாசகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவையின் மையப்பகுதியாக இருக்கும் கோபாலபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர் அலுவலகங்கள், தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், கோவை ரயில் நிலையம், சாந்தி திரையரங்கம், வணிக வளாகங்கள் வங்கி என பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதனிடையே இங்குள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருக்கும் ஆட்டோ ஸ்டேண்ட் அருகே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் வாசகர் ஒருவர் வீடியோவுடன் புகார் அளித்துள்ளார்.

பொது இடத்தில் பலரும் சிறுநீர் கழித்திருக்கும் அந்த இடத்தை பல நாட்களாக சுத்தப்படுத்தாமல் இருப்பதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், உடனே இதனை சரி செய்து தரவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp