கோவையில் முட்டிக்கொண்ட காட்டு யானைகள்- சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவை தடாகம் பகுதியில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டத்தில் இரண்டு யானைகள் முட்டி மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், கணுவாய், வரபாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அண்மை காலங்களாகவே அதிகரித்து உள்ளது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன அவ்வப்போது வீடுகளிலும் ரேஷன் கடைகளிலும் வைக்கப்பட்டுள்ள அரிசி உள்ளிட்ட பொருட்களையும் தின்று செல்கிறது இதனால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குட்டி யானைகள் உட்பட 10க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் தடாகம் அடுத்த வரப்பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளது. அப்போது அங்குள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்துள்ளன அதில் இரண்டு யானைகள் முட்டி மோதிக் கொண்டுள்ளன.

இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி யில் பதிவான நிலையில் தற்பொழுது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மே மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி தேதி அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...