கோவையில் இந்திய பாதுகாப்பு துறை கருத்தரங்கு துவங்கியது…

கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய பாதுகாப்புத்துறை கருத்தரங்கு துவங்கியது.

கோவையில் கொடிசியா பாதுகாப்பு புதுமை மற்றும் அடல் இன்க்யூபேஷன் மையம் சார்பில் பாதுகாப்பு குறித்தான கருத்தரங்கு கொடிசியாவில் வளாகத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்திய பாதுகாப்பு உற்பத்தி துறையில் தனியார் தொழில் துறையில் பங்கேற்பை ஊக்குவிப்பது, தொடர்புகளை வலுப்படுத்துவது ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது.

இதில் பல்வேறு பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் அவர்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர் மேலும் பாதுகாப்புத்துறை சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கருத்தரங்கில் இந்திய ராணுவத்தின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் கொள்முதல், அரசு மின் சந்தை, எதிர்கால தேவைகள் பாதுகாப்பு உற்பத்தியாளர் பதிவு செயல்முறை, தரச் சான்றிதழ் பெறுவதற்கான தகுதி விதிமுறைகள் அரசு திட்டங்கள் குறித்தான இணைய தளங்கள், நிதி மற்றும் கடன் வசதிகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம் பெற்றுள்ளன.

இந்த நிகழ்வை பாதுகாப்பு உற்பத்தியாளர் பதிவு மற்றும் தரநிலை மேலாண்மை இயக்குனர் மனோகரன் துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் கொடிசியா தலைவர் கார்த்திகேயன், TIDCO துணை தலைவர் விநாயகம், கொடிசியா பாதுகாப்பு புதுமை மற்றும் அடல் இன்க்யூபேசன் தலைவர் சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Recent News

Video

Join WhatsApp