கோவை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் தீவிரம்…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் நோக்கில் மெட்டல் டிராக்டர் வாயிலாக நோயாளிகளின் உறவினர்களின் உடமைகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனியார் ஒப்பந்த அடிப்படையில் 120 பேர் காவலர்களாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இருப்பினும் அவ்வப்போது எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன.

இதன் காரணமாக பாதுகாப்பை பலப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அரசு மருத்துவமனை பாதுகாப்பு காரணங்களுக்காக மெட்டல் டிடெக்டர் வாயிலாக சோதனை செய்ய பாதுகாப்பு பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்களின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அவர்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Recent News

Video

Join WhatsApp