தேசிய இயற்கை மருத்துவ தினம்- கோவையில் விழிப்புணர்வு பேரணி…

கோவை: கோவையில் எட்டாவது தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாடு முழுவதும் இன்றைய தினம் எட்டாவது தேசிய இயற்கை மருத்துவ தினம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் இயற்கை மருத்துவம் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இயற்கை மருத்துவத்துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை பந்தய சாலை பகுதியில் எட்டாவது தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி இயற்கை மருத்துவ மாணவர்கள் மற்றும் ஜே எஸ் எஸ் இயற்கை மருத்துவம் யோகா கல்லூரி மருத்துவ மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.

இயற்கை மருத்துவம் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கும் வண்ணம் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் யோகாசனத்தின் நன்மைகள் குறித்தும் இந்த பேரணியில் எடுத்துரைக்கப்பட்டன. உடல் நலத்தை எவ்வாறு பேணி காக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த பேரணியில் பதாகைகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டன.

Recent News

Video

Join WhatsApp