கோவையில் மூதாட்டியிடம் ரூ.38.62 லட்சம் மோசடி செய்தவர்கள் கைது!

கோவை: பங்குச்சந்தையில் லாபம் தருவதாக கோவையில் மூதாட்டியிடம் ரூ.38.62 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நவாவூர் பிரிவை சேர்ந்தவர் 64 வயது மூதாட்டி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள் தாங்கள் தெரிவிக்கும் பங்குச்சந்தை நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றுள்ளனர்.

இதனை நம்பி மூதாட்டி, மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணையாக ரூ. 38 லட்சத்து 62 ஆயிரத்து 938ஐ அனுப்பி வைத்தார். அதன் பின்னர் மூதாட்டிக்கு எந்த ஒரு லாப பணமும் கிடைக்கவில்லை.

வெகு நாட்களாகியும் முதலீடு செய்த பணமும், லாப பணமும் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த மூதாட்டி மர்ம நபர்களை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது அவர்கள் சரியான பதில் அளிக்காமல் இருந்து வந்தனர்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் மூதாட்டியிடம் பண மோசடியில் ஈடுபட்டது கர்நாடகா மாநிலம் பெல்காம்மை சேர்ந்த தங்கராஜூ (47) மற்றும் சண்முக சுந்தரம் (50) ஆகியோர் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கர்நாடகா விரைந்து சென்று தங்கராஜூ, சண்முக சுந்தரம் ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களை கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp