திருவாரூர் சம்பவம்- கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆட்டோ நிறுத்தம் அமைக்க அனுமதிக்க கோரி கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சமாதானம் ஏற்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் கலைந்துச் சென்றனர்.

இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி நள்ளிரவில் சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் ஹனிபா உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுநர்களை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலம் அருகே சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வேண்டுமென்றே கைது நடவடிக்கையை மேற்கொண்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட போலிசாரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp