கோவையில் நள்ளிரவில் அடுத்தடுத்து வெடித்த கேஸ் சிலிண்டர்கள்! – வீடியோ காட்சிகள்

கோவை: கோவையில் உள்ள பாத்திரக்கடையில் கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கனூர் சாலையில் பாத்திரக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையை நேற்றிரவு வழக்கம் போல் பணியாளர்கள் பூட்டிச் சென்றனர்.

சுமார் 11 மணிக்கு மேல், கடையில் லேசான தீவிபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே தீ மளமளவென கடை முழுவதும் பரவியது.

பெட்ரோல் பங்க் அருகே உள்ள கடையில் தீ விபத்து ஏற்பட்டதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். ஆனால் தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்பாகவே கடையில் இருந்த பொருட்கள் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கின.

Advertisement

இந்த தீ விபத்தின் போது கடையில் வைக்கப்பட்டிருந்த 5க்கும் மேற்பட்ட சிறு சிறு கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடிக்கத்தொடங்கின. இதனிடையே அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

நள்ளிரவில் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மும்பையில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள்- இருவர் கைது…

கோவை: மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய 5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய ரூபாய் 5 லட்சம் போதை மாத்திரைகளை போலீசார்...

Latest News Coimbatore

Video

குளத்துப்பாளையம் மக்களே கவனம்- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை:சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குளத்துப்பாளையம் பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி...