கோவையில் சீமைத்தினை, பாப்பரை சாகுபடி பயிற்சி: விவசாயிகள், வேளாண் அலுவலர்கள் பங்கேற்பு!

கோவை: அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத்தினை, பாப்பரை மற்றும் குலசாமை பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள் மற்றும் வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழக அரசின் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் 2026–27-ன் கீழ் நவம்பர் 5ஆம் தேதி இந்தப் பயிற்சி நடைபெற்றது. இதில் 50 விவசாயிகள் மற்றும் 40 வேளாண் விரிவாக்க அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement

பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப இயக்குநர் ந.செந்தில் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் மீ.தமிழ்செல்வி முன்னிலை வகித்தார்.

பயிற்சியில், சீமைத்தினை, பாப்பரை மற்றும் குலசாமை பயிர்களின் ஊட்டச்சத்து முக்கியத்துவம், மண் மற்றும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ற சாகுபடி முறைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், உழவியல் முறைகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

Advertisement

பாப்பரை சாகுபடி குறித்து பேராசிரியர் சு.சிவக்குமார், குலசாமை குறித்து பேராசிரியர் மு.வைத்தியலிங்கம், சீமைத்தினை எனப்படும் கினோவா குறித்து பேராசிரியர் கி.ஐயனார் ஆகியோர் தொழில்நுட்ப விளக்கங்களை அளித்தனர். ஸ்டாமின் இயக்குநர் ப.சங்கரலிங்கம் பயிற்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

இந்தப் பயிர்கள் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமான வாய்ப்புகளை உருவாக்குவது, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிப்பது மற்றும் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Advertisement

பயிற்சியில் வழங்கப்பட்ட தொழில்நுட்பங்களை விவசாயிகளின் வயல்களில் செயல்படுத்துவதன் மூலம் மாற்றுப் பயிர் சாகுபடியை விரிவுபடுத்தவும், நிலையான வேளாண்மை மற்றும் விவசாயிகளின் வருமான மேம்பாட்டிற்கு வழிவகுக்கவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை துணை இயக்குநர்கள் இர.விஜயகல்பனா, ஈ.நிர்மலா மற்றும் வேளாண்மை அலுவலர் ஜா.ரகுமத்நிசா ஆகியோர் செய்திருந்தனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஹீலியம் பலூனில் பறந்த ஆய்வுக் கருவி… பூமியைப் படம்பிடித்து கோவை மாணவர் சாதனை!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 11 அரசுப் பள்ளிகளின் 55 மாணவர்கள் பங்கேற்ற ‘ப்ராஜெக்ட் உயர்வு’ திட்டத்தில், ஹீலியம் பலூனில் அனுப்பப்பட்ட ஆய்வுக் கருவி 35 கி.மீ.க்கும் அதிகமான உயரத்திலிருந்து பூமியைப் படம்பிடித்துள்ளது.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...