கார்த்திகை தீப நாள்- மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மகா தீபம்… VIDEO

கோவை: கார்த்திகை தீப நாளை முன்னிட்டு மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

கோவையில் மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ நாமங்களை முழங்கி வழிபட்டனர்.

Advertisement

கார்த்திகை தீபத்திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பொதுமக்களும் அவரவர் இல்லங்களில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மதுக்கரை பகுதியிலுள்ள பழமை வாய்ந்த தர்மலிங்கேஸ்வரர் மலை கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமசிவாய, சிவனே போற்றி, அரோகரா எனர நாமங்களை துதித்து வழிப்பட்டனர்.

இக்கோவில் மலைகோவில் என்பதால் வனத்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் கவனமுடன் மலையேறி செல்ல வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. மலை மீது ஏற முடியாத பக்தர்கள் கீழே நின்றவாரு மகா தீபத்தை வழிப்பட்டனர்.

Recent News

இண்டிகோ விமானங்கள் ரத்து- கோவையில் பயணிகளுக்கு கட்டணத்தொகை Refund…

கோவை: கோவையில் இண்டிகோ விமானம் ரத்து கட்டணங்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் பயணிகள் புக்கிங் செய்த கட்டணங்கள் திருப்பி வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாகவே நாடு...

Video

Join WhatsApp