கோவை: கோவையில் காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் ஒருவர் விபரீத முடிவெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அரியலூர் மாவட்டம் புங்கக்குடி அருகே உள்ள நடுத்தெரு பூ ஒட்ட கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் சத்யா (வயது 22).
இவர் கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் . இதற்காக அந்த நிறுவனத்திற்கு சொந்தமான குடியிருப்பில் தங்கி இருந்து வந்தார்.




அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஸ்ரீராம் என்பவரிடம் சத்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த காதல் விவகாரம் இருவர் வீட்டிற்கும் தெரிந்து உள்ளது. இந்த நிலையில் சத்யா தனது சொந்த ஊரான அரியலூருக்கு செல்ல விரும்பியுள்ளார். ஆனால் சத்யா ஊருக்கு செல்வதை ஸ்ரீராம் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
சத்யாவை ஊருக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். ஆனாலும் ஊருக்கு புறப்பட்ட சத்தியா பஸ்ஸில் செல்வதற்காகதுடியலூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தார்
அப்போது மீண்டும் ஸ்ரீராம் சத்யாவை ஊருக்கு செல்ல வேண்டாம் என்று கூறி தடுத்துள்ளார். இந்த நிலையில் சத்யா எலி மருந்தை வாங்கி சாப்பிட்டு உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீராம் அவரை உடனடியாக துடியலூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே சிகிச்சை பெற்று வந்த சத்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சத்யாவின் சகோதரி சிவரஞ்சனி துடியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



