கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
கோவையில் கடந்த நவம்பர் மாதம் 2ஆம் தேதி விமான நிலையம் பின்புறம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கருப்பசாமி, தவசி, காளீஸ்வரன் ஆகிய மூன்று பேர் போலிசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 3 பேரும் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த வழக்கில் அடையாள அணிவகுப்பு முடிக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று பேரும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் மூன்று பேருக்கும் நீதிமன்ற காவல் 17 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் குற்றப்பத்திரிக்கை நகல் இன்று வழங்கப்பட்டு 12ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 12 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



