ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி- கோவை ரயில் நிலையத்தில் சோகம்…

கோவை: கோவை ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற பயணி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ரயில் நிலையத்தில் சென்னை செல்ல ரயிலில் ஏற முயன்ற பயணி கால் தவறி நடைமேலையில் நடைமேடையில் விழுந்து ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை ரயில் நிலையத்திற்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக் கணக்கான ரயில்கள் வந்து செல்கின்றன. இதில் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு டெல்லியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்ற பயணி சென்னை செல்லும் ரயிலில் ஓட ஓட ஏற முயன்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது அவரது கால் தவறி கீழே விழுந்ததில் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கி உயிரிழந்தார்.

அவரது உடலை மீட்ட ரயில்வே காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உடமைகளை சோதனை செய்து அவரது சகோதரருக்கு இந்த சம்பவத்தை தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால் தவறி ரயிலில் சிக்கி பயணி உயிரிழந்த சம்பவம் கோவை ரயில் நிலையத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...