மத்திய அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம்- கோவை வழக்கறிஞர்கள் முன்னெடுப்பு…

கோவை: இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் அனுப்பும் போராட்டத்தை வழக்கறிஞர்கள் மேற்கொண்டனர்.

நீதிமன்றங்களில் அமல்படுத்தபட்டுள்ள இ ஃபைலிங் முறைக்கு பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த இஃபைலிங் முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் பார் அசோசியேசன் சார்பில் அந்த நடைமுறைக்கு எதிர்ப்புகள் வழுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று இ ஃபைலிங் முறையை கண்டித்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாக கண்டன பதாகைகளையும் முழக்கங்களை எழுப்பி வந்த 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்தில் மத்திய அரசிற்கு இ ஃபைலிங் முறையை வாபஸ் பெற வலியுறுத்தி கடிதம் அனுப்பினர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் வானவில் சுயமரியாதை பேரணி…

கோவை: கோவையில் வெகுவிமர்சையாக வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது. கோவையில் நடைபெற்ற வானவில் சுயமரியாதை பேரணியில் மூன்றாம் பாலினத்தவர்கள் ஒருபால் ஈர்ப்பாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கோவையில் ஏழாவது வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது....

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.