விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த மலேசியா எம்பி- ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து கோவையில் பேட்டி…

கோவை: கோவை வந்த மலேசியா எம்பி விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மலேசியா எம்பி தத்தோ ஸ்ரீ சரவணன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கோவையில் ஆசாத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்ததாகவும், சமயத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தோடு செயல்படுபவர் ஆசாத் என்றும் அவருடைய நிகழ்ச்சி இன்று கோவையில் நடைபெறுகிறது அதில் வெளிநாட்டு தமிழர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவதாகவும் அதில் கலந்து கொள்ள வருகை புரிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியா மலேசியா தொழில் முதலீடுகள் குறித்தான கேள்விக்கு, நீண்ட நாட்களாகவே இந்தியா மலேசியா வர்த்தக தொடர்பு நன்றாக இருந்து வருகிறது என்றும் அதிக முதலீட்டு நிறுவனங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் குறிப்பாக இருவழிப்பாதைகளில் நீண்டகால வர்த்தக தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

மலேசியாவில் விஜயின் ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது தொடர்பான கேள்விக்கு அவருடைய கலை நிகழ்ச்சி நன்றாக நடைபெற்றது என பதில் அளித்தார். தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் அரசியல் தொடர்பான கேள்விக்கு அவருக்கு வாழ்த்துக்கள் என கூறினார்.

Recent News

Video

Join WhatsApp