பீளமேட்டில் கார் மீது ஏறி ரகளை செய்தவர் மீது வழக்கு!

கோவை: பீளமேட்டில் கார் மீது ஏறி ரகளை செய்த நபர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை, பீளமேடு அருகே அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகில் நேற்று முன்தினம் இரவு 10:30 மணி அளவில் காரில் வேகமாக வந்த வாலிபர் அந்த வழியாக வந்த வாகனங்கள் மீது மோதினார்.

இதனால் பொதுமக்கள் அவரை காரை விட்டு இறங்கும்படி கூறினர். 
அப்போது லுங்கி மற்றும் பனியன் மட்டும்அணிந்து இருந்த, அந்த வாலிபர் திடீரென காரின் மேற்கூரை மீது ஏறி நின்று சிகரெட் புகைத்த படி ரகளை செய்தார்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
இதுகுறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீசார் அங்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் ராமதிலகம் அந்த வாலிபரை, விசாரிக்க முயன்றார்.

அப்போது அந்த வாலிபர் சப் இன்ஸ்பெக்டரையும் அவதூறாக பேசியுள்ளார். 
இதனால் அந்த வாலிபரை மடக்கி பிடித்த போலீசார் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் மருத்துவமனையில் சேர்ந்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அவரது பெயர் அந்தோணி என்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் தற்போது சேலம் லீபு பஜார் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் ராம திலகம் அளித்த புகாரின் பேரில் அந்தோணி மீது போக்குவரத்து மற்றும்பொதுமக்களுக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தி இடையூறு செய்தது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp