எங்களுடன் சேரும் பொழுது தான் விஜய் அசைக்க முடியாத சக்தியாக மாறுவார்- தமிழிசை செளந்தரராஜன் பேட்டி…

கோவை: NDA கூட்டணியுடன் சேர்ந்தால் தான் விஜய் அசைக்க முடியாத சக்தியாக மாறுவார் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அமித்ஷா திருச்சிக்கு வந்து சென்று பலத்தை கொடுத்து சென்று இருக்கிறார் என்றும் 2026 எங்களுக்கானது என்றும் தெரிவித்தார்.

இன்று காலை முதல்வர் ஸ்டாலின் பேசுவதை கேட்டதாகவும்
அவதூறு ஷா என்று பெயர் வைக்கிறேன் என்று சொல்கின்றார்,
நீங்கள் பெயர் வைத்து தான் அவர் பிரபலம் அடைய வேண்டும் என்று கிடையாது என்றார்.


நான்காயிரம் கோயிலுக்கு மேல் குடமுழுக்கு செய்திருக்கிறோம்,
பாஜக ஆட்சி செய்யும் இடங்களில் செய்திருக்கிறார்களா என்ன கேள்வி கேட்கிறார் முதல்வர் எனவும், மத்திய அரசு மீது இதுவரை ஊழல் குற்றச்சாட்டுகள் கிடையாது,
மத்திய அரசு ஊழல் இல்லாமல் நடத்திக் கொண்டு இருக்கிறோம்,
இதுபோல திமுக இருக்கின்றதா என கேள்வி எழுப்பினார்.

செந்தில் பாலாஜி மீது இந்த குற்றமும் இல்லையா? நேரு மீது எந்த வழக்கும் இல்லையா? பொன்முடி மீது ஊழல் வழக்கு இல்லை என்று சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பிய அவர்,அனைத்திலும் கமிஷன் வாங்கிக்கொண்டு இருக்கும் நீங்கள் பிற்காலத்தில் விசாரணை கமிஷனை சந்திக்க வேண்டி இருக்கும் எனவும் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த பிறகும் மேல்முறையீடு செய்வோம் என அமைச்சர் ரகுபதி கூறுகிறார்.சேகர் பாபுவுக்கு எங்களை பார்த்தாலே பதட்டம் வந்து விடுகிறது என்றார்.


நீதியரசர் சாமிநாதனுக்கு எதிராக இம்பிச்மென்ட்டை திரும்ப பெற வேண்டும் என வழக்கறிஞர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
நீதிபதியை தவறாக பேசியதற்கு முதல்வர் விசாரிக்கப்பட வேண்டும் அமைச்சர் ரகுபதி விசாரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதிமுகவுக்கு போடும் ஓட்டு, பாஜகவிற்கு போடும் ஓட்டு என திமுக சொல்லியிருப்பது குறித்த கேள்விக்கு, எங்களைப் பார்த்துக் கொண்டு இருப்பதற்கு பதிலாக காங்கிரஸ் உங்கள் கூட்டணியில் இருக்கின்றதா? என பார்க்க வேண்டும் என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணியை எட்டிப் பார்த்து பேசிக்கொண்டு இருப்பதைவிட, உங்கள் கூட்டணி சரியாக இருக்கின்றதா என்பதை ஸ்டாலின் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.தேசிய ஜனநாயக கூட்டணி பலம் பெற்று வருகிறது, இண்டியா கூட்டணி வெல வெலத்து வருகிறது என தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேரும் பொழுது தான் விஜய் அசைக்க முடியாத சக்தியாக மாறுவார், இல்லாவிட்டால் அவர் அசைத்துப் பார்க்கின்ற கட்சியாக தான் தவெக இருக்கும் என தெரிவித்தார்.


தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற பொறுப்பு இருக்கிறது,
விஜய்க்கும் அதே பொறுப்பு இருக்கிறது என தெரிவித்த அவர், திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என நினைக்கின்றீர்கள், அது தனியாக முடியுமா? அணியாக முடியுமா என்பதை விஜய் சிந்தனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் இதுவரை வழங்கப்படாமல் இருப்பது குறித்த கேள்விக்கு, அதை நானும் எதிர்பார்க்கிறேன்,
நானும் எப்பொழுது தணிக்கை அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன், என கூறிய அவர் நானுன் படம் பார்க்கலாம் என ஆர்வமாக இருக்கிறேன் என தெரிவித்தார்.


நீதிபதி இரண்டு படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் என்ன என கேட்டிருக்கிறார்.
அதனால் காலையில் ஒரு ஷோ, மாலையில் ஒரு ஷோ என ஜனநாயகன், பராசக்தி இரண்டு படத்தையும் பார்க்கலாம் என இருக்கிறேன் என தெரிவித்தார்.


சென்சார் போர்டை நீதிபதி விமர்சித்தால் நான் என்ன செய்ய முடியும்,சென்சார் போர்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என தெரிவித்தார். சிபிஐ, சென்சார் போர்டை வைத்து தமிழக வெற்றி கழகத்தை கூட்டணிக்கு கொண்டுவர பாஜக நினைக்கின்றதா என்ற கேள்விக்கு, இந்த கேள்வியை நான் சென்சார் செய்கிறேன் என பதில் அளித்தார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் தற்பொழுது பாமக எங்களுடன் சேர்ந்து இருக்கிறது அக்கட்சி தலைவர் ராமதாசை புறக்கணித்திருப்பது குறித்த கேள்விக்கு,
நான் பதில் சொல்ல வில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp