கோவை: கோவையில் Group A மற்றும் Class 1 அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் Group A மற்றும் Class 1 அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்ட 3-நாள் பயிற்சி வகுப்புகள் 07-ம் தேதி முதல் 09-ம் தேதி வரை நடைபெறுகின்றது.
இதன் துவக்க விழா சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பினை இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் பரத்வாஜ் துவக்கி வைத்தார்.

மேலும் கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் மாநில வன சேவை அகாடமியின் முதல்வருமான திருநாவுக்கரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த பயிற்சி வகுப்பில் தென்னிந்திய மாநிலங்களில் இருந்து பல்வேறு துறைகளைச் சார்ந்த 32 அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பில் வனப்பகுதிகளைத் தாண்டி உருவாகும் வனவிலங்கு பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளவும், பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், அறிவார்ந்த முடிவுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் சலிம் அலி மையத்தின் தலைமை அதிகாரி ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை பரிமாறினர்.

