கோவை: கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களும் இம்மாதம் இரண்டு நாட்கள் மூடப்படுகின்றன.
தமிழ்நாட்டில் முக்கிய பண்டிகைகள் மற்றும் நினைவு தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். இந்த நாட்களில் அனைத்து வகை டாஸ்மாக் கடைகள், மனமகிழ் மன்றங்கள், மதுபானக் கூடங்களும் அடைக்கப்பட அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உத்தரவு பிறப்பிக்கப்படும்.
தடையை மீறி கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். அந்த வகையில் இந்த மாதம் 2 நாட்கள் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, திருவள்ளுவர் தினம் (ஜனவரி 16), குடியரசு தினம் (ஜனவரி 26) ஆகிய இரண்டு நாட்கள் கோவையில் உள்ள அனைத்து டாஸ்மாக் மற்றும் மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
விதிமீறினால்…
இந்த நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாக ஆண்டு முழுவதும் செயல்படும் டாஸ்மாக் கடைகள், ஆண்டிற்கு எட்டு நாட்கள் மட்டுமே விடுமுறை பெறும் நிலையில், அதில் இந்த மூன்று நாட்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

