கோவை: சிறுவனை நாய் கடித்ததை கண்டு கொள்ளாத பெண் உரிமையாளர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அகமது (41). அதே பகுதியை சேர்ந்தவர் சாந்தா (40). அவர் தான் வீட்டில் வளர்ந்து வரும் நாயை அடிக்கடி தெருவில் விட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அகமதுவின் மூத்த மகன் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அந்த நாய் சிறுவனை துரத்தி அவரது வலது காலில் கடித்தது. வலியால் துடித்த அவர் சத்தம் போட்டார்.
அவரின் சத்தத்தை கேட்டு வெளியில் வந்த அகமது மற்றும் குடும்பத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதைத் தொடர்ந்து அகமது, சாந்தாவிடம் சம்பவத்தை கூறி நாயை கட்டி வைத்து வளர்க்குமாறு தெரிவித்துள்ளார். ஆனால் சாந்தா அதை கண்டு கொள்ளாமல் அகமதை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
இதுகுறித்து அகமது குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

