தெருவில் சென்ற சிறுவனை கடித்த நாய்; பெண் மீது வழக்குபதிவு

கோவை: சிறுவனை நாய் கடித்ததை கண்டு கொள்ளாத பெண் உரிமையாளர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அகமது (41). அதே பகுதியை சேர்ந்தவர் சாந்தா (40). அவர் தான் வீட்டில் வளர்ந்து வரும் நாயை அடிக்கடி தெருவில் விட்டு வந்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில் நேற்று முன்தினம் அகமதுவின் மூத்த மகன் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அந்த நாய் சிறுவனை துரத்தி அவரது வலது காலில் கடித்தது. வலியால் துடித்த அவர் சத்தம் போட்டார்.

அவரின் சத்தத்தை கேட்டு வெளியில் வந்த அகமது மற்றும் குடும்பத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

Advertisement

இதைத் தொடர்ந்து அகமது, சாந்தாவிடம் சம்பவத்தை கூறி நாயை கட்டி வைத்து வளர்க்குமாறு தெரிவித்துள்ளார். ஆனால் சாந்தா அதை கண்டு கொள்ளாமல் அகமதை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

இதுகுறித்து அகமது குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஹீலியம் பலூனில் பறந்த ஆய்வுக் கருவி… பூமியைப் படம்பிடித்து கோவை மாணவர் சாதனை!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 11 அரசுப் பள்ளிகளின் 55 மாணவர்கள் பங்கேற்ற ‘ப்ராஜெக்ட் உயர்வு’ திட்டத்தில், ஹீலியம் பலூனில் அனுப்பப்பட்ட ஆய்வுக் கருவி 35 கி.மீ.க்கும் அதிகமான உயரத்திலிருந்து பூமியைப் படம்பிடித்துள்ளது.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...