Libraries in coimbatore | கோவையின் டாப் நூலகங்கள் பட்டியல் இதோ…

libraries in coimbatore: மாணவர்களின் அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் நூலகங்கள் கோவையில் ஏராளமாக உள்ளன. அவற்றில் டாப் 5 நூலகங்களையும் அது எங்கே உள்ளது என்பதனையும் இங்கே காண்போம்.

முந்தைய காலகட்டங்களில் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காண நூலகங்களை நோக்கி மாணவர்கள் படையெடுத்தனர். ஒரு சொல்லிற்கான பொருளை அறிந்துகொள்ள சொற்பொருள் அகராதியை (dictionary) புரட்டி 10 வார்த்தைகளைக் கற்று கொள்வர்.

libarary image boy reading

தொழில்நுட்ப வளர்ச்சியால், அனைத்து தகவல்களும் உள்ளங்கையில் என்பதைப் போல, நம்முடைய செல்போனிலே அனைத்து தரவுகளையும் தற்போது அறிய முடிகிறது.

குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பை சொல்லிக் கொடுக்க வேண்டிய பெற்றோர்களே, தற்போது செல்போனில் இருக்கும் தேடல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

அதேபோல, தற்போது, தனியார் பள்ளிகளிலும், டிஜிட்டல் மயமான கல்விமுறைக்கு மாறி வருகின்றனர்.

ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனே, லேப்டாப்பை ஆன் செய்து தனக்கு தேவையான தகவலை தேடுகிறான். 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் சாப்ட்வேர் கோடிங்கில் கைதேர்ந்தவனாக இருக்கிறான்.

இதையெல்லாம் பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், மறுபுறம் புத்தகம் வாசிப்பு மாணவர்களிடையே மிகவும் குறைந்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது.

girl watching phone
while rreading

இதனிடையே மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்பதைப் போல, மீண்டும் நூலகங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

நாமும், நமது பிள்ளைகளையும் நூலகங்களுக்கு அழைத்துச் செல்வோம். குறிப்பாக, இந்த கோடை விடுமுறையை மிகவும் பயனுள்ளதாக மாற்றவும், அவர்களுக்கு புது அனுபவத்தை வழங்க, அருகே உள்ள நூலகங்களுக்கு அழைத்துச் சென்று பாருங்கள். நாளடைவில், அதுவே அவர்களுக்கு பழக்கமாகவும் மாறலாம்.

இதற்காக கோவையில் உள்ள முக்கிய நூலகங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். அவற்றை இந்த தொகுப்பில் காணலாம்.

Libraries in coimbatore

இடம்: RS புரம் சாலை

நீண்ட வரலாறும், அமைதியான வாசிப்பு சூழலும் கொண்ட பிரபல நூலகம்.

இடம்: RS புரம், கௌலி பிரவுன் சாலை.

பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான நூல்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் மையம்.

இடம்: சித்தாபுதூர்

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான உறுப்பினர் அடிப்படையிலான நவீன நூலகம்.

just books library

இடம்: பி.என். புதூர்

வேளாண்மை, அறிவியல், ஆராய்ச்சி தொடர்பான அரிய நூல்கள் நிறைந்த கல்வி மையம்.

tnau library

இடம்: RS புரம், கவுளி பிரவுன் சாலை

பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான நூல்கள் இந்த நூலங்களில் கிடைக்கின்றன.

புத்தகங்களைப் புரட்டி பாடங்களையும், சொற்களையும் கற்றுக்கொள்ளும் குழந்தைகளின் நினைவுத்திறன் மற்ற குழந்தைகளை விட அபாரமாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கான நேரத்தை ஒதுக்கி அவர்களை நூலகங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள் பெற்றோர்களே…

வாசகர்கள் தங்களுக்கு தெரிந்த பெற்றோர்களுக்கு இந்த பயனுள்ள செய்தியை ஷேர் செய்யலாம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்- மிகப்பெரிய ப்ராஜெக்டிற்கு அரசு அனுமதி…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.202.54 கோடி மதிப்பீட்டில் 4.30 கி.மீட்டர் நீளத்திற்கு நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கோயம்புத்தூர்...

Video

Join WhatsApp