கோவை: கோவையில் BSNL நிறுவனம் உட்பட தனியார் நிறுவனங்களுக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் உட்பட தனியார் நிறுவனங்களுக்கும் சேர்த்து 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
அதன்படி விளாங்குறிச்சி சாலை சேரன் மாநகர் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக மாநகராட்சியின் அனுமதியின்றி கேபிள் பதிப்பதற்கு குழி தோண்டிய மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.
சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டதை தொடர்ந்து தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றிற்கு ஐந்து லட்சம் ரூபாய் சாலையினை சரிவர சீரமைக்காத சூயஸ் குடிநீர் நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் என மொத்தம் 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இந்த அபராதத்தை விதித்துள்ளார்.

