கோவை: தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை தெரிவிக்க புதிய இணையதளம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் கூட்டணி அமைப்பதிலும், தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதிலும் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தவெக சார்பில் என்னென்ன தேர்தல் அறிக்கைகள் வரப்போகிறது என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதற்காக, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று மக்களின் கருத்தைக் கேட்டு வருகின்றனர்.
தற்போது, ,மக்கள் கருத்தை இணையதளம் வாயிலாக கூறும் வகையில், இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தேர்தல் அறிக்கையில் தாங்கள் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பரிந்துரைக்கலாம் என்று தவெக அழைப்பு விடுத்துள்ளது.
பொதுமக்கள் இந்த https://tvkmanifesto.com/ இணையதளம் மூலமாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். மக்களின் கருத்தைப் பொறுத்து தவெக.,வின் தேர்தல் அறிக்கை இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் கருத்துகளையும் சொல்லிடுங்க மக்களே…

