கோவை கதிர்நாயக்கன்பாளையத்தில் இரவில் புகுந்த காட்டு யானை… வீட்டின் சுவர், கூரை சேதம்!

கோவை : கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கதிர்நாயக்கன்பாளையம் கிராமத்தில், நேற்று இரவு குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை, பூங்கொடி என்பவரின் வீட்டைச் சேதப்படுத்தியது. வீட்டில் வைத்திருந்த ரேஷன் அரிசியையும் யானை சாப்பிட்டுச் சென்றது.

வனப்பகுதியிலிருந்து உணவு தேடி வந்த யானை, குடியிருப்புப் பகுதி வழியாகப் பூங்கொடியின் வீட்டை அடைந்தது. அங்கு வீட்டின் முன்புறக் கேட், சுவர் மற்றும் கூரையைச் சேதப்படுத்திய யானை, அவர் வாங்கி வைத்திருந்த ரேஷன் அரிசியையும் சாப்பிட்டது. பின்னர், யானை அங்கிருந்து சென்றது.

Advertisement

சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், கதிர்நாயக்கன்பாளையத்துக்கு நேரில் சென்று சேதமடைந்த வீட்டைப் பார்வையிட்டனர். அப்போது, வீட்டின் சுவர், கூரை மற்றும் கேட் சேதமடைந்ததை அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் எடுத்துக்கூறினர்.

இரவு நேரத்தில் காட்டு யானை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து வீட்டைச் சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில், வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, காட்டு யானை இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் காட்சி, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...