Coimbatore budget 2026: கோவை மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்!

Coimbatore budget 2026: கோவை மாநகராட்சியில் 2026-27 ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாக உள்ளது கோவை மாநகராட்சி. தொழில், கல்வி, விவசாயம் மற்றும் மருத்துவ மையமாக திகழும் கோவை மாநகராட்சியில் நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கூட்டம் இன்று நடைபெற்றது.

அதன்படி, 2026-27ம் நிதி ஆண்டிற்கான மாநகராட்சி பட்ஜெட் இன்று மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பட்ஜெட்டை கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முபசீரா தாக்கல் செய்தார்.

Advertisement

இந்த பட்ஜெட்டில், கோவை மாநகராட்சியின் வருவாய் மற்றும் மொத்த மூலதன வரவினமாக ரூ.4,915.50 கோடி கணக்கில் காட்டப்பட்டுள்ளது.

இதேபோல், நடப்பு நிதி ஆண்டில் மாநகராட்சியின் செலவினம் ரூ.5041.71 கோடியாக இருக்கும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

இதன் மூலம் மாநகராட்சிக்கு இந்த நிதி ஆண்டில் ரூ.126.21 கோடி பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மாநகராட்சியின் வளர்ச்சிக்காக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என்றும், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சொன்ன விஷயங்களையே மீண்டும் குறிப்பிட்டு வெறுமனே கடமைக்கு ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், கடமைக்கு ஒரு பட்ஜெட் வெளியிட்டதைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் , ஷர்மிளா ஆகிய இருவரும் வெளிநடப்பு செய்தனர்.

https://www.newscloudscoimbatore.com/anganwadi-nutrition-workers-protest-in-coimbatore-wearing-black/

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை வந்த இந்திய தேர்தல் ஆணையர்- தமிழ்நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பு…

கோவை: தமிழ்நாட்டில் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு நடந்ததற்கு மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...