வெள்ளியங்கிரி சென்று திரும்பிய வாலிபர் பலி… கோவையில் அதிர்ச்சி!

கோவை: வெள்ளியங்கிரி மலை சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நடப்பு ஆண்டிற்கான வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். அதன்படி, பிப்ரவரி 1ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலையேற்றத்திற்குவரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு வனத்துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், மலையேற்றத்தின் போது பக்தர்கள் பீடி, சிகரெட் மற்றும் தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதைத் தடுக்கும் விதமாக பைரவா என்ற மோப்பநாய் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு சென்று திரும்பிய பக்தர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையைச் சேர்ந்தவர் மாடசாமி (25). இவர் கோவை உக்கடத்தில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

Advertisement

இந்த நிலையில் முன்தினம் இரவு மாடசாமி தனது நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று அதிகாலை பைக்கில் வீடு திரும்பினார்.

அவரது வாகனம் உக்கடம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து மாடசாமி கீழே விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த மாடசாமியை மீட்ட அப்பகுதி மக்கள், ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாடசாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி,...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...