கருப்பு உடை அணிந்து கோவையில் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்…

கோவை: 14 நாளான இன்று கருப்பு உடை அணிந்து அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி நடத்தி வரும் நிலையில் இன்று கருப்பு உடை அணிந்து போராட்டத்தை.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 13 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் 14வது நாளான இன்று கருப்பு உடை அணிந்து போராட்டத்தை நடத்தி உள்ளனர்.

கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நாள்தோறும் இரவு முழுவதும் அங்கேயே படுத்து உறங்கி சமையல் செய்து உணவருந்தி போராட்டத்தை தொடர்ந்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 16,500 ரூபாய் அலுவலக உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் என்ற அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்க வேண்டும்,

அங்கன்வாடிக்கு கோடை விடுமுறை தற்காலிக பணி நீக்க காலத்தில் பிழைப்பூதியம் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி தேசிய மருத்துவ காப்பீடு மகப்பேறு விடுப்பு 12 மாதம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தொடர் போராட்டத்தை தொடர்ந்து இன்று கருப்பு உடை அணிந்து அவர்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அரசு உடனடியாக தங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அவர்களது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2026: என்ன செய்யலாம்? என்ன கூடாது?

மார்ச் 3ம் தேதி நடைபெறும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் ரத்த நிலவு பற்றிய முழு தகவல்கள். கிரகண நேரம், பார்க்கலாமா?, என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.