கோவையில் தொடங்கியது குரூப் 2 தேர்வு

கோவை: கோவையில் இன்று நடைபெறும் குடிமை பணிகள் (குரூப் 2) தேர்வை 103 தேர்வாளர்கள் எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குடிமைப் பணிகள் தேர்வு(குரூப்2) இன்று தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது மாவட்டத்திற்கு ஒரு தேர்வு மையம் என்ற அடிப்படையில் இத்தேர்வு நடைபெறுகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளி தேர்வு மையத்தில் இத்தேர்வு நடைபெறுகிறது. இதனை 103 தேர்வாளர்கள் எழுதுகின்றனர்.

9:30 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில் 9 மணிக்குள் அனைத்து தேர்வாளர்களும் தேர்வு மையத்திற்குள் இருப்பதற்கு அறிவுறுத்தப்பட்டு அதன்படி அனைவரும் 9 மணி வரை தேர்வாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் ஸ்மார்ட் வாட்ச் செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் எடுத்துச் செல்வதற்கு அனுமதியில்லை என்பதால் காவல்துறையினர் தேர்வாளர்களின் உடமைகளை சோதனை செய்த பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியை சேர்ந்த வலது கை இழந்த கர்ப்பிணி பெண் மஞ்சுளா என்பவர் தேர்வு எழுத வருகை புரிந்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் நாளை துவங்குகிறது உணவு திருவிழா- அனுமதி இலவசம்…

கோவை: கோவையில் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை உணவு திருவிழா நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையின் கீழ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில்...

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.